சர்தார் ஹிட்; ரூ.78 லட்சத்தில் இயக்குனருக்கு கார்

கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சர்தார். படம் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது.
தனக்கென தனி முத்திரையோடு கதையை எடுத்து இயக்கியிருந்தார் பி எஸ் மித்ரன்.
தற்போது வரை இந்த படம் தொடர்ந்து திரையரங்குகளில் வசூல் சாதனை செய்து வருகிறார்.இரண்டு வாரங்களை கடந்த பிறகும், ரசிகர்களிடம் இந்த படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பெற்று வருவதால், தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குநர் P S மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் சுமார் 78 லட்சம் மதிப்புள்ள டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துருக்கிறார்.