ரசிகர்கள் மீது தடியடி.. வருத்தம் தெரிவித்த விக்ரம்!

 ரசிகர்கள் மீது தடியடி.. வருத்தம் தெரிவித்த விக்ரம்!

விக்ரம் நடித்து அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் தான் “கோப்ரா”. வரும் 30 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், நேற்று காலை திருச்சியிலும் மாலை மதுரையிலும் ப்ரோமோஷன் பணிக்காக சென்றிருந்தார் விக்ரம்.

அப்போது, திருச்சி விமான நிலையத்தில் விக்ரமை கண்ட ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமானது.

இதனால்,விமான நிலையத்தில் பாதுகாப்பில் இருந்து மத்திய போலீஸார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதற்கு வருத்தம் தெரிவித்த விக்ரம், தனது ட்விட்டர் பக்கத்தில்

“இன்று கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்கு திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள்.

அதே வேளையில் சில விரும்பதகா சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்க்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.

 

Related post