சர்தார் படம் அல்ல பாடம் – சீமான் பேச்சு!!!

 சர்தார் படம் அல்ல பாடம் – சீமான் பேச்சு!!!

இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி தீபாவளி தின கொண்டாட்டமாக வெளிவந்த திரைப்படம் தான் சர்தார் ..

படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதால் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய கலெக்ஷனை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தினை பார்த்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சர்தார் படம் அல்ல பாடம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசும்போது, “இதை படம் என்று சொல்ல முடியாது. நமக்கெல்லாம் இது ஒரு படிப்பினை. இந்தக் கருத்தை வலியுறுத்தி தான் நான் பேசி வருகிறேன். தண்ணீர் மிகப்பெரிய வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டு விட்டது.

உலக உயிர்களின் உயிர் உடைமையை சந்தைப்பொருளாக மாற்றியதிலிருந்து நாம் எவ்வளவு பெரிய பேராபத்தை நோக்கிய பயணித்துக்கொண்டிருக்கும் என்பது புரிய வரும். இந்தப்படம் அதை மிகவும் ஆழமாக விளக்கிச் சொல்லியுள்ளது. இயக்குனர் மித்ரன் தரமான படத்தை உருவாக்கியுள்ளார்.

இரும்புத்திரையிலும் அவர் பொறுப்புடன் ஒரு படத்தை உருவாக்கியிருந்தார். அவரிடம் சமூக பொறுப்புடன் கூடிய ஒரு பார்வை இருக்கிறது. ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் தரமாக உள்ளது. அனைத்தும் நேர்த்தியாக உள்ளது. சர்தார் ஒரு சிறந்த படைப்பு. அன்பும் பாராட்டுகளும்” என்று தெரிவித்துள்ளார்

 

Related post