சிறு படங்களையும் உதயநிதி வெளியிட வேண்டும்; கோரிக்கை வைத்த இயக்குனர் சீனு ராமசாமி

கண்ணே கலைமானே படத்தில் உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக நடிக்க வைத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. தற்போது உதயநிதி நடிப்பில் உருவாகி ஓடிக் கொண்டிருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தினை வாழ்த்தி அவருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் சீனு ராமசாமி, “கண்ணே கலைமானே படத்தின் சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மக்கள் அன்பன் என அழைத்தேன் அதை மெய்பிக்கும் விதமாக சிறப்பாக இருந்து நெஞ்சுக்கு நீதி
அன்று நான் சொன்னது போல இதுபோன்ற கதை கருத்தாழமிக்க மக்களிடையே வாழும் படங்களில் நடித்தால் கலையும் எதிர்கால முற்போக்கு கருத்துலகமும் கைவிடாது.
அது போல வெளிவர முடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை வாங்கி ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டால் அதில் உயிராகும் நடிகர்கள் இயக்குனர்கள் புதிய கலைஞர்கள் நன்றியோடு உங்களை என்றும் மறவாது வாழ்த்துவர்.
இப்பெருமையினை சொல்லி மகிழம் தருணத்தை எதிர்நோக்கி….
வாழ்த்துகள். ” என்று கூறியுள்ளார்.