மசாலா படங்களுக்கு நடுவே மேன்மையான படம் – இயக்குனர் சீனு ராமசாமியை புகழ்ந்த மிஷ்கின்!

 மசாலா படங்களுக்கு நடுவே மேன்மையான படம் – இயக்குனர் சீனு ராமசாமியை புகழ்ந்த மிஷ்கின்!

விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் குருசோமசுந்தரம் நடிக்க இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “மாமனிதன்”.

கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்குனர் சீனு ராமசாமியை புகழ்ந்திருந்தார். இவரைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் மிஷ்கினும் சீனு ராமசாமியை வாழ்த்தியிருக்கிறார்.

அவர் கூறியதாவது,

”சீனு ராமசாமிக்கு எனது நன்றிகள்!

எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் சூறாவளி அவ்வப்போது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. மாமனிதன் என்ற கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஓடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அவனை மீண்டும் ஒரு முழு மனிதனாக்குகிறது. அவன் “மாமனிதன்” ஆகிறான்.

மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம். இந்தப்படம் என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது.

மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள்.” என்று கூறியுள்ளார்.

Related post