தலைவர் விசிட், தளபதி உரையாடல்; மட்டற்ற மகிழ்ச்சியில் ஷாருக்கான்!!

 தலைவர் விசிட், தளபதி உரையாடல்; மட்டற்ற மகிழ்ச்சியில் ஷாருக்கான்!!

தெறி, மெர்சல் , பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சுமார் 30 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் சுவாரசியமாக இருந்ததாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். அதன் பிறகு நயன்தாராவுடன் சேர்ந்து படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி, தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் உரையாடல், அட்லியும், பிரியாவும் அருமையான உணவை கொடுத்தது என 30 நாட்களும் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களாக இருந்தது. நான் இப்போது சிக்கன் 65 தயார் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு தற்போது ரஜினி, விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

Related post