மக்கள் செல்வன் என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் விஜய் சேதுபதி – ஷாஹித் கபூர் புகழாரம்;

 மக்கள் செல்வன் என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் விஜய் சேதுபதி – ஷாஹித் கபூர் புகழாரம்;

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் தொடர் தான் “ஃபார்ஸி”.

இத்தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான ‘ஃபார்ஸி’, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

விரைவில் வெளியாகவிருக்கும் அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – ஃபார்ஸியின் முன்னோட்டத்தை இன்று பிரைம் வீடியோ வெளியிட்டது.

முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பகிர்ந்து கொண்டதாவது,

இயக்குநர் ராஜ் :

இந்த தொடர் எங்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தது. கோவிட் காலத்தில் இதை நாங்கள் படமாக்கினோம். அதில் சில சிக்கல்கள் இருந்தது, அதை தாண்டி இதை நாங்கள் உருவாக்கினோம். நமக்குள் இருக்கும் உண்மையை அடிப்படையாக வைத்து தான் இந்த தொடர் உருவாக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்து மக்களின் எண்ண ஓட்டத்தை இந்த கதை பிரதிபலிக்கும். தொடரை பார்த்துவிட்டு, உங்கள் கருத்தை கூறுங்கள்.

இயக்குநர் டிகே :

இந்த கதை நீண்ட காலமாக எங்களிடம் இருந்தது. எழுத்தாளர்கள் எங்களுடன் இணைந்து, மக்களுடன் எளிதாக தொடர்புப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதையை எழுதியுள்ளார்கள். அனைவரது கூட்டு முயற்சி தான் இந்த தொடர். உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த தொடர் இருக்கும்.

நடிகர் ஷாஹித் கபூர் :

இந்த ஆண்டை ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடர் மூலம் துவங்குவது மகிழ்ச்சி. இப்போது அனைவரும் ஓடிடி எனும் டிஜிட்டல் தளங்களை ஒரு முக்கிய அங்கமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த நேரத்தில் ‘ஃபேமிலி மேன்’ எனும் வெற்றி பெற்ற தொடரை இயக்கிய கூட்டணி என்னை அழைத்தது, எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

அதனால் எந்த தயக்கமும் இல்லாமல், ஓடிடியில் இணைய நானும் தயாராகிவிட்டேன். அவர்கள் இந்த கதையை ஒரு கூட்டணியாக இணைந்து அதிக கவனத்துடன் உருவாக்கி உள்ளனர். கதாபாத்திர வடிவமைப்பு ஒவ்வொன்றும் சிறப்பான வடிவில் வந்துள்ளது.

‘மக்கள் செல்வன்’ என்ற பெயருக்கு பொருத்தமானவர் தான் விஜய் சேதுபதி. அவர் இதயபூர்வமான நடிகர், அவரிடமிருந்து நிறைய கற்று கொள்ள விருப்பப்படுகிறேன். அவர் சிறப்பான பணியை இந்த தொடருக்காக கொடுத்துள்ளார். தொடரில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். பிரைம் வீடியோ உடன் இணைந்தது மகிழ்ச்சி.

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி :

குறும்படமோ, தொடரோ அனைத்துமே காட்சிகளுக்கு உயிர் கொடுப்பது தான். ராஜ் மற்றும் டிகே என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு நடிகராக எனக்கு முழு சுதந்திரமும் இந்த தொடரில் இருந்தது. ஷாஹித் கபூருடன் நடித்தது, சிறந்த அனுபவமாக இருந்தது. ராஷி கண்ணாவுடன் நடிக்கும் போது அந்த காட்சியே ஒரு தனித்துவமான ரிதமில் இருக்கும். அவருடன் திரையை பகிர்வது எப்பொழுதும் மகிழ்ச்சி தான். இந்த தொடர் ஒரு கூட்டுமுயற்சியால் உருவாகியுள்ளது. தொடர் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்.

ராஷி கண்ணா கூறியதாவது..,

வெப் சீரிஸ்ஸை உருவாக்குவதில் ஏற்கனவே வெற்றி கண்டவர்கள் ராஜ் மற்றும் டிகே. அவர்கள் இந்த தொடரை இயக்கும் போது, இது ஒரு முழுமையான தொடராக இருந்தது. இந்த தொடரில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி. விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த நடிகருடன், நடிப்பதே மிகச்சிறந்த அனுபவம். ஷாஹித் கபூர் இந்த தொடரில் வித்தியாசமான கதாபத்திரத்தில் காட்சியளிப்பார். அனைத்து பெண்களும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய கதாபாத்திரமாக இந்த கதாபாத்திரம் இருக்கும். ஆண்கள் நிறைந்திருக்கும் இந்த சமூகத்தில் ஒரு பெண் அடையும் வெற்றியை.., இந்த தொடரில் நீங்கள் பார்க்கலாம்.

“ஃபார்ஸி” தொடரின் ட்ரைலரை காண கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

 

Related post