Shang-chi and the legend of ten rings : Ultimate beginning of Marvel phase 2

 Shang-chi and the legend of ten rings : Ultimate beginning of Marvel phase 2

ஷாங் சீ மற்றும் பத்து மோதிரங்கள்: மார்வெலின் மற்றுமொரு பிரமாண்டமான நம்மை வியப்பில் திகைக்க வைக்கும் திரைப்படம் தான் இந்த ஷாங் சீ. படத்தின் கதை அமெரிக்கவில் சிறுவயதில் வீட்டை விட்டு வெளியே வந்து சாதாரண வாழ்க்கை வாழும் படத்தின் நாயகன் ஷாங் சீ, அவருக்கு ஒரு நண்பியும் உள்ளார். நன்றாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையை கெடுப்பது போல் நாயகனின் தந்தை நாயகனிடம் இருக்கும் ஒரு சங்கிலியை பறித்து வர தனது ஆட்களை ஏவி விடுகிறார். அவர்களை சமாளித்து தனியாக வாழும் தனது தங்கையை தேடி செல்கிறார் நாயகன. அங்கு சென்று அவரை காப்பாற்ற அதற்குள் அவர்களது தந்தையிடம் மாட்டிக்கொள்கிறார்கள் இருவரும். பின்பு தான் தெரிகிறது இறந்த தனது அம்மா தனது தந்தையிடம் பேசியதாகவும் அம்மாவின் க்ராமித்தில் அவரை சிறை வைத்து இருப்பதாகவும் அவரை காப்பாற்ற தான் தனது தந்தை இவ்வாறு செய்கிறார் என்று, அந்த மாயாஜால கிராமத்தையே அழித்து தனது மனைவியை மீட்க நினைக்கும் தந்தை , அப்பாவி மக்களை தனது தந்தையிடம் இருந்து காப்பாற்ற போராடும் நாயகன் ஷாங் சீ. இருவரில் யார் வென்றார்கள் அவர்களுக்கு அந்த பத்து மோதிரங்கள் கிடைத்ததா?

மார்வெல் எப்பொழுதும் தரமான படங்களை மட்டுமே தரும் என்பதில் சந்தேகமில்லை போல் இந்த படத்திலும் நேர்த்தியாக தந்துள்ளது. படத்தில் முக்கியமாக நம்ம ஊர் மக்களுக்கு பிடிக்கும் வகையில் உணர்ச்சிகள் பொங்க உள்ளது ஷாங் சீ. படத்தின் மிகப்பெரிய பலம் இந்த சென்டிமென்ட் காட்சிகள் என்றே கூறலாம். மற்றபடி படத்தின் பிரமண்டமும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. குடும்பத்தோடு இந்த விடுமுறை நாட்களில் பார்க்க கூடிய தரமான திரைப்படம்.

Related post