15 ஆண்டுகளான சிவாஜி; ரஜினியை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஷங்கர்!

 15 ஆண்டுகளான சிவாஜி; ரஜினியை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஷங்கர்!

மிகப்பெரும் பொருட்செலவில் ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வெளியான திரைப்படம் தான் “சிவாஜி”.

தமிழ் சினிமாவின் வசூல் மழை சாம்ராஜ்யமாக அப்படம் விளங்கியது. இப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனம் நிறைய சுவாரஸ்யமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறது.

அத்துடன் இயக்குனர் ஷங்கர் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது..

நடிகையும் ஷங்கரின் மகளுமான அதிதி சங்கரும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து இருக்கிறார். ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படமும் இப்போது இணையத்தில் பெரும் வைரல் தான்.

 

Related post