தலைவர் 169; கவனமாக நடிகர்களை தேர்வு செய்யும் படக்குழு!

 தலைவர் 169; கவனமாக நடிகர்களை தேர்வு செய்யும் படக்குழு!

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் நெல்சன். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை கண்டு அதிர்ந்த ரஜினிகாந்த், தனது படத்திற்கு ஒவ்வொரு பணிகளையும் கவனமாக கவனித்து வருகிறார்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் நடிகைகளை இறுதி செய்யும் பணிகளையும் இயக்குனர் மும்முரமாக செய்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினி 169 படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related post