SHOOT THE KURUVI திரைவிமர்சனம்

மதிவாணன் இயக்கத்தில், ஷா ரா, விஜே ஆஷிக், அர்ஜை மற்றும் சிலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “SHOOT THE KURUVI”.
எதை பேசுகிறது இப்படம்?
சிறு வயது முதல் தனது மிடுக்கான தோற்றத்துடன் ஒருவர் எப்படி கேங்ஸ்டர் ஆகிறார். ஒரு டாஸ்க் எடுத்துக்கொண்டால் அதை முடிக்க எந்த அளவிற்கு தீவிரமாக இருக்க வேண்டும் என்பதை காமெடியாக இப்படம் உணர்த்தும்
கதைப்படி,
யார் நினைத்தாலும் நெருங்க முடியாத அளவிற்கு ஒரு மாஸான கேங்ஸ்டராக வருகிறார் குருவிராஜா (அர்ஜை), சிறுவயதில் இருந்து தனது திறமையாலும், பலத்தாலும் பெரும் கேங்க்ஸ்டராக உருவெடுத்து வந்து நிற்கிறார்.
மற்றொருபுறம், தனது ஆப்ரேஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால், வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கிறார் ஆஷிக். அவரது கனவில் தோன்றும் சுரேஷ் சக்ரவர்த்தி, எப்படியும் சாகத்தான் போகிறாய். 5 டார்கெட்டை வைத்து அதை முடித்து விடு என்கிறார்.
அந்த டார்கெட் நடக்கும் போது, எதிர்பாராதவிதமாக அர்ஜையை அவர் கேங்க்ஸ்டர் என்று அறியாமலேயே தாக்கி விடுகிறார் ஆஷிக்.
அதன்பிறகு, அர்ஜை மற்றும் ஆஷிக் வாழ்வில் என்ன நடந்தது? அந்த 5 டார்கெட்டுகள் என்ன? என்பது மீதிக்கதை.
எமோஷன், காமெடி என அனைத்தையும் கலந்த ஒரு பாத்திரமாக தான் ஷாரா மற்றும் விஜே ஆஷிக்கின் பாத்திரங்கள் அமைந்திருக்கும். இருவருமே கொடுப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்து நம்மை சிரிக்க வைத்திருக்கின்றனர்.
மிடுக்கான தோற்றம், கம்பீர குரல் என கேங்ஸ்டாருக்கு தேவையான 10 பொருத்தமும் பக்காவாக பொருந்தியுள்ள ஒருவர் தான் அர்ஜை. ஆக்டிங்கில் மட்டும் தேர்ச்சி வேண்டும்.
1 மணிநேர கதை, தனியாக தியேட்டருக்கு சென்று 500 ரூபாய் செலவு செய்து பார்க்க வேண்டும் என்று தேவையில்லை. வேலைக்கு செல்லும் நேரத்தில் பார்த்துக்கொண்டே போகலாம். இல்லையா வேலை முடித்து வரும் போது ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க இந்த படத்தை பார்த்து மகிழலாம்.
மாஸ், தமாஸ் என இரண்டுக்கும் பஞ்சமில்லாமல் சொல்ல வந்ததை மட்டுமே சொல்லி நம் நேரத்தை நேர்த்தியாக யூஸ் செய்துள்ளார் இயக்குனர் மதிவாணன்.
பிரண்டன் சுஷாந்தின் ஒளிப்பதிவு பாராட்டப்படவேண்டிய ஒன்று. அதற்கு க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு அறைக்குள் நடக்கும் சண்டை காட்சி தான் காரணம். பிரண்டனின் கடின உழைப்பு அந்த காட்சியில் தெரியும்.
மூன்ராக்ஸ் இசையில் மாஸ் எலிமெண்ட் அதிகம் தான்.
SHOOT THE KURUVI – டைட்டிலுக்கு நியாயம் கற்பித்த படம் – (3.25/5)