SIIMA விழாவில் மாஸ் காட்டிய சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா!!
பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது நாள் SIIMA Awards 2022 விழாவில், தமிழ், மலையாள படங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா, யோகிபாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிறந்த நடிகர்களுக்கான விருதில் தமிழில், ‘மாநாடு’ படத்திற்காக சிம்பு சிறந்த நடிகர் விருதை வென்று அசத்தினார்.
அதேபோல், ‘டாக்டர்’ படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகர் விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. இதேபிரிவில் சார்பட்டா பரம்பரையில் நடித்த ஆர்யாவுக்கும் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த வில்லன் விருதை, மாநாடு படத்தில் நடித்ததற்காக எஸ்ஜே சூர்யா வென்றார்.
சிறந்த துணை நடிகருக்கான விருது ‘தலைவி’ படத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கும், அவுட்ஸ்டாண்டிங் பெர்ஃபாமன்ஸ் விருது யோகி பாபுவுக்கும், சிறந்த காமெடி நடிகர் விருது ரெடின் கிங்ஸ்லிக்கும் வழங்கப்பட்டன.
கர்ணன்’ படத்திற்காக, சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பாளர் விருது வென்றார்.