வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எனது ரசிகர்களுக்கான படமாக இருக்கட்டுமே சார் … இயக்குனரிடம் கேட்டுக் கொண்ட சிம்பு!

 வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எனது ரசிகர்களுக்கான படமாக இருக்கட்டுமே சார் … இயக்குனரிடம் கேட்டுக் கொண்ட சிம்பு!
Digiqole ad

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.

இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில், சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன், ஐசரி கே கணேஷ், ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆண்டனி கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சிலம்பரசன், “ இப்படத்தில் எனது உடம்பை பற்றி நெகடிவ் விமர்சனம் செய்ய யாராலும் முடியவில்லை. படத்திற்காக நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்.

ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு மெனக்கெடல் செய்து கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இப்படத்தின் முதல் பாகமான இதில் எனது ரசிகர்களுக்கான காட்சி எதுவுமில்லை. ஆனால், இரண்டாம் பாகத்தில் எனது ரசிகர்கள் கொண்டாடும் விதமான காட்சிகள் கொஞ்சம் கெளதம் வாசுதேவ் மேனன் வைப்பார் என்று எண்ணுகிறேன்.

இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்ததும், அதற்கான பணிகளில் நிச்சயம் இறங்குவோம்.” என்று கூறினார்.

இரண்டாம் பாகம் நிச்சயம் ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தெரிவித்தார்.

விழாவின் முடிவில் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை படக்குழு வெளிப்படுத்தினர்.

Digiqole ad
Spread the love

Related post