Sillukarupatti திரைப்படம் விமர்சனம்
சில்லுக்கருப்பட்டி ஒரு பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் அற்புதமான படைப்பு இந்த படம். நான்கு வெவ்வேறு கதைகள் நான்கு கதைகளிலும் மனிதமும் மற்றும் உண்மையான காதலும் பரவி கிடைக்கிறது. நான்கு வெவ்வேரு பருவங்களில் மலரும் காதலை அழகாக காட்சிப்படுத்தி சொல்லியிருக்கிறார் இயக்குனர்.சமுத்திரக்கனி மற்றும் சுனைனா வின் கதையில் குழைந்தைகள் இருக்கும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் கதையை தத்ரூபகம வெளிப்படுகிறது.காக்கா கடி கதையில் காதலுடன் மனிதமும் எவ்வள்வு முக்கியம் என்பதை விளக்குகிறார் இயக்குனர்.
நான்கு கதையின் கதாபாத்திரங்களும் கதைக்கு நல்ல தேர்வாக அமைந்தது படத்தின் மிகப்பெரிய பலம். சிறுவர்கள் இடம்பெறும் முதல் கதையும் அதன் நடிகர்களும் கச்சிதம்.படத்தின் நான்கு கதைகளுக்கு நான்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் உழைத்திருக்கிறார்கள். காட்சிகள் அத்தனையும் ஆஹா ரகம்.படத்தின் இசையும,பாடல்களும் உயிரோட்டமாக அமைந்துள்ளது.இயக்குனர் ஹலிதா ஷமீம் தான் எந்த ஒரு வகையிலும் ஆண் இயக்குனருக்கு குறைந்தவர் இல்லை என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.அவருக்கு நிச்சயம் ஒரு பெரிய எதிர்காலம் உள்ளது என வாழ்த்துவோம்.