இரண்டு வேடங்களில் சிம்பு; பரபரக்கும் STR 48!

 இரண்டு வேடங்களில் சிம்பு; பரபரக்கும் STR 48!

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

இரண்டாவது படமாக எஸ் டி ஆர் 48 படத்தினை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி. இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது. இப்படத்தில் சிம்பு இரண்டு வேடங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், சிம்புவின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு திருப்புமுனையாக இருக்கக் கூடும் என்கிறது கோலிவுட் தரப்பு.

Spread the love

Related post