பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்தில் சிம்புவை இயக்கப் போவது இவரா.?

 பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்தில் சிம்புவை இயக்கப் போவது இவரா.?
Digiqole ad

சிம்பு நடிக்க கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு. வரும் செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கப்பட இருக்கிறது. இதில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தினைத் தொடர்ந்து கே ஜி எப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளராம். அதுமட்டுமல்லாமல், சூரரைப் போற்று படத்தினை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

 

Digiqole ad
Spread the love

Related post