கில்லி படத்தில் அப்படி போடு பாடலை பாடிய பாடகர் கே கே திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!

 கில்லி படத்தில் அப்படி போடு பாடலை பாடிய பாடகர் கே கே திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!
Digiqole ad

எம் குமரன் படத்தில் வரும் ’நீயே நீயே’, காக்க காக்க படத்தின் ‘உயிரின் உயிரே’ , கில்லி படத்தில் அப்படி போடு உள்ளிட்ட பல வெற்றி பாடல்களை பாடியிருப்பவர் தான் பின்னணி பாடகர் கே கே என்ற கிருஷ்ணகுமார் குன்னத். இவருக்கு வயது 53.

கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், சின்மயி உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இவரது இழப்பு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் இசை நிகழ்ச்சி நடைபெறும் போது ரசிகர்களின் கண் முன்னே அவரது உயிர் பிரிந்திருப்பது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Digiqole ad
Spread the love

Related post