சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் விமர்சனம்

 சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் விமர்சனம்

மிர்ச்சி சிவா, அஞ்சு குரியன், மேகா ஆகாஷ், ஷா ரா நடிப்பில் விக்னேஷ் ஷா இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்”.

எதை பேசுகிறது இப்படம்?

மொபைல் செயலிகளையும், அந்த செயலிகள் எப்படி நாம் செய்யும் விஷயங்களை எப்படி கவனிக்கிறது என்றும். அதிலுள்ள ஆபத்துக்கள் என்ன என்பதையும் விரிவாக பேசுகிறது இப்படம்.

கதைப்படி,

சைன்டிஸ்ட் ஷா ரா, சிங்கிளாக இருக்கும் ஆண்கள் காதலிப்பதற்காக ஒரு பெண்ணின் உணர்வுகளை கொண்ட “சிம்ரன்” என்ற செயலியை உருவாக்குகிறார்.

அந்த செயலி எப்படி செயல்படும் என்றால், தன்னை காதலிக்கும் வரை “சிம்ரன்” அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்யும். பணம், சந்தோஷம் என சக மனிதன் கொடுக்காத அனைத்து உதவிகளையும் அது செய்து தரும். அதுவே, அவர்கள் அதை விட்டு விலகினாலோ, அதை காதலிக்க மறுத்தாலோ அவர்களை பெரும் சிக்கலில் மாட்டிவிட்டு சநதோஷப்படும் சிம்ரன்.

ஒரு நாள், எதிர்பாராத விதமாக சிவாவிடம் “சிம்ரன்” செயலி கொண்ட போன் கைக்கு கிடைக்கிறது. அதன் பின் அவரின் வாழ்க்கையே பிரகாசமாக மாறுகிறது. அப்படி மாறிய பட்சத்தில், சிம்ரன் தனது காதலை சிவாவிடம் தெரிவிக்கிறது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சிவாவை பழி வாங்க காத்திருக்கிறது சிம்ரன்.

சிவாவை சிம்ரன் எப்படி பழி வாங்கியது? சிம்ரன் செய்த சூழ்ச்சியிலிருந்து தப்பித்தாரா சிவா? என்பது படத்தின் இரண்டாம் பாகம்.

 ஷங்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவா வழக்கம் போல் காமெடியில் கலக்கியுள்ளார். அவரின் அனைத்து காமெடியிலும் ஒர்க் அவுட் ஆகியிருந்தது. குறிப்பாக, மா கா பாவுடன் அவர் வந்து சென்ற காம்பினேஷன் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவையாகவே இருக்கும்.

சிம்ரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷுக்கு யாருடனும் காம்பினேஷன் காட்சிகள் இல்லை. முழுக்க முழுக்க க்ரீன் மேட்டில் அவரின் காட்சிகள் படமாகிவிட்டனர் படக்குழு. அவர் நடிக்க பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அவருக்கு கொடுக்கப்பட்ட எமோஷன் காட்சியை மேலும் சிறப்பாக செய்திருக்கலாம்.

அஞ்சு குரியன் அழகு தேவதையாக வந்து செல்கிறார். அவரின் நடிப்பு சிறப்பு.

உடன் நடித்த ஷா ரா இப்படத்தில் காமெடியை தவிர்த்து சீரியசான கதாபாத்திரத்தை முயற்சித்து வெற்றிபெற்றுள்ளார்.

KPY பாலா மற்றும் அவரின் நண்பராக வருபவர் இருவரும் ஒரு எரிச்சல் செய்யும் கதாபாத்திரமாக தான் திரையில் தோன்றுகிறார்கள். காரணம், அவர்கள் காமெடி செய்ய முயற்சித்து நம்மை கடுப்பெற்றுவது தான்.

விக்னேஷ் ஷா கதை தேர்வு சிறப்பு. ஆனால், ரஜினியின் எந்திரன் படத்தை பார்த்தது போல் ஒரு எண்ணம். திரைக்கதை சிறப்பு, க்ளைமேக்ஸ் காட்சியை இன்னும் வலுவாக வைத்திருந்தால் முழு திருப்தி கிடைத்திருக்கும்.

ஆனால், வாட்ஸ் ஆப் மற்றும் அது சார்ந்த சில செயலிகளில் அந்த செயலி எப்படி நம்மை கவனிக்கிறது. நாம் பேசும் விஷயங்களை எப்படி சேகரித்து வைக்கிறது. ஒரு வேலை அந்த போன் ஹேக் செய்யப்பட்டால் அல்லது அந்த போன் நம்மை பழி வாங்க நினைத்தால் என்ன நடக்கும் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மேலோட்டமாக இப்படத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் விக்னேஷ் ஷா.

லியோன் ஜேம்ஸ் பின்னணி காமெடிக்கு செட் ஆகிவிட்டது. பாடல்கள் கேட்கும் ரகம்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் – பழிவாங்கும் கண்டுபிடிப்பு –  (3.25/5)

Related post