மழைக்காக தான் நிறுத்தப்பட்டது; மாவீரன் படக்குழு கொடுத்த அப்டேட்

 மழைக்காக தான் நிறுத்தப்பட்டது; மாவீரன் படக்குழு கொடுத்த அப்டேட்

மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிக்க உருவாகி வரும் படம் தான் மாவீரன்.

இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும் நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில், இயக்குநருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்தது.

இதுபற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது, ‘மழை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இன்று (நேற்று) முதல் படப்பிடிப்பு தொடங்கி நடக்கிறது. சிவகார்த்திகேயன், அதிதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.’ என்றனர்.

 

Related post