மாவீரன் செட்’டில் கேக் வெட்டிய சிவகார்த்திகேயன்

 மாவீரன் செட்’டில் கேக் வெட்டிய சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து மெரினா திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து மிகப்பெரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்போது இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது. தற்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருக்கென இருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று சிவகார்த்திகேயன் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். சமூக வலைதளத்தில் அவரது ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பிரபலங்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினர்.

இந்நிலையில், அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரும் கேக் ஒன்றை வெட்டி தங்களது வாழ்த்துகளை அவர்கள் தெரிவித்தனர்.

படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page