‘ஜெயிலர்’ படத்தில் SPB-யின் பாடல்; SK கேமியோ?

 ‘ஜெயிலர்’ படத்தில் SPB-யின் பாடல்; SK கேமியோ?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த நடிக்கும் படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், நெல்சன் இயக்குகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, “முத்துவேல் பாண்டியன்” என்ற வீடியோவை வெளியிட்டது படக்குழு. அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் நேற்று முதல் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஜெயிலரில் சிவகார்த்தியேன்:

படத்தின் அறிவிப்பின் போதே, இப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை இல்லையென்றாலும், சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தான்.

மேலும், ஜெயிலர் படத்தின் ஓப்பனிங் சாங் லிரிக்ஸை சிவகார்த்திகேயன் தான் எழுத்தவுள்ளாராம்.

ஜெயிலரில் SPB-யின் குரல்:

பல படங்களில், SPB தான் ரஜினிக்கான ஓப்பனிங் சாங்கை பாடியிருப்பார். அந்த பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் தான். அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற படங்களின் பாடல்கள் இதுவரையிலும் நமது ஹிட் லிஸ்டில் இருக்கும்.

தற்போது, “பேட்ட” படத்தில் முதல் முறையாக ரஜினி படத்திற்கு இசையமைத்த அனிருத். சென்டிமெண்டாக SPBயை “மரண மாஸ்” பாடலில் பாடவைத்து தெறிக்கவிட்டிருப்பார். அதனைத் தொடர்ந்த “தர்பார்” படத்திலும் ஓப்பனிங் சாங்கை படியாது SPB தான்.

அதன்பின், இமான் இசையில் வெளியான “அண்ணாத்த” படத்தின் பாடல் தான் SPB மற்றும் ரஜினி கூட்டணியில் வெளியான கடைசி பாடல்.

தற்போது, SPB-யின் குரலில் தான் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடல் அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. SPB பாடிய முந்தைய பாடல்களில் அவரின் குரலை எடுத்து ‘டிஜிட்டல் சிங்க்’ செய்யலாம் என அனிருத் தரப்பில் இருந்து யோசனை சொல்லப்பட்டதாம்.

அது சாத்தியமெனில், அதை செய்யலாம் என படக்குழு ஒப்புதல் தெரிவித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அமைந்தால், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது SPB ரசிகர்களுக்கும் அது செம்ம விருந்தாய் அமையும்.

Spread the love

Related post

You cannot copy content of this page