ரஜினி வழியில் சிவகார்த்திகேயன்

 ரஜினி வழியில் சிவகார்த்திகேயன்

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சுரேஷ் ப்ரொடக்‌ஷன் மற்றும் சாந்தி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பிரினிஸ்”.

இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. விநியோகஸ்தரருக்கு மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய இப்படத்தால் மிகவும் கவலையானார் சிவகார்த்திகேயன்.

படத்தினை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்திருந்தார் மதுரை அன்புச் செழியன். இப்படத்தினால் ஏற்பட்ட இழப்பில் பாதி தொகையை தருவதாக கூறி சிவகார்த்திகேயன் 3 கோடியும் தயாரிப்பு நிறுவனம் 3 கோடியும் என மொத்தமாக 6 கோடி ரூபாயை விநியோகஸ்தரருக்கு வழங்கியுள்ளனர்.

தன்னுடைய படம் தோல்வியடைந்தால் இழப்பீடு தொகையை வழங்குவதில் ரஜினிகாந்த் எப்போதுமே முன்னோடி. தற்போது அவர் வழியில் சிவகார்த்திகேயன் இழப்பீடு தொகையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post