என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்; சூப்பர் ஸ்டாரை சந்தித்த சிவகார்த்திகேயன் உருக்கம்!

 என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்; சூப்பர் ஸ்டாரை சந்தித்த சிவகார்த்திகேயன் உருக்கம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் “டான்”. இப்படத்தினை அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார்.

எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ப்ரியங்கா மோகன், சிவாங்கி, முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் மிகப்பெரும் ஹிட் அடித்து திரையரங்குகளில் மட்டுமே இதுவரை சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

இந்நிலையில், இப்படத்தினை கண்டு களித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினரை தனது வீட்டிற்கு நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். படக்குழுவினரோடு சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட சிவகார்த்திகேயன், “With the DON of Indian cinema Met super star rajinikanth sir and got his blessings.. That 60 minutes will be a lifetime memory..Thank you so much Thalaiva for your time and valuable appreciations for DON ” என்று கூறியுள்ளார்.

Related post