அஜித், சிம்புவை தொடர்ந்து வெற்றி இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்;
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரின்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது சிம்பு படத்தின் இயக்குனரை சிவகார்த்திகேயன் ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஹிட் படம்கூட கொடுக்க முடியாமல் தடுமாறி வந்த சிம்புவுக்கு மாநாடு என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்து இருந்தார் வெங்கட்பிரபு. அப்படத்தில் கிடைத்த வெற்றி மூலம் சிம்பு தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சிம்புவுக்கு தரமான ரீ-என்ட்ரி கொடுத்த வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார்.
தற்போது, வெங்கட் பிரபு நாக சைதன்யாவை வைத்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்த கையுடன் முதன்முறையாக சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு கூட்டணியில் திரைப்படம் உருவாக உள்ளது. சிவகார்த்திகேயனுடன் வெங்கட் பிரபு இணையும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்றும். புத்தம் புதிய கூட்டணியை கொண்டாட ரசிகர்களும் காத்துக்கிடக்கின்றனர்.