மீண்டும் துவங்கப்பட்ட “SK 21” படப்பிடிப்பு!

 மீண்டும் துவங்கப்பட்ட “SK 21” படப்பிடிப்பு!

மாவீரன் படத்தினை முடித்த கையோடு இயக்குனர் ரங்கூன் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில், படப்பிடிப்பு தளமான காஷ்மீரில் சில பாதுகாப்பு காரணம் கருதி ஷூட்டிங் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஷூட்டிங்க் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால் மீண்டும் இன்று முதல் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளது படக்குழு.

சிவகார்த்திகேயன் அடுத்த வாரம் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post