விரைவில் இயக்கத்தில் இறங்கும் சிம்பு

மாநாடு, வெந்து தணிந்தது காடு என ரீ எண்ட்ரீ கொடுத்த இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர் அடித்ததால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சிம்பு.
இந்நிலையில், சிம்புவும் கமல்ஹாசனும் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்களாம். சிம்புவை சில படங்கள் காண்பித்து பார்க்குமாறு கூறியிருக்கிறாராம் கமல்ஹாசன்.
இந்நிலையில், விரைவில் தான் படம் இயக்குவதாக கமல்ஹாசனிடம் தனது விருப்பத்தை சிம்பு தெரிவிக்க, நானே தயாரிக்கிறேன் என்று மனம் மகிழ்ந்து கூறியிருக்கிறாராம் கமல்ஹாசன்.
வரும் பொங்கலுக்கு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.