சூரகன் விமர்சனம்

 சூரகன் விமர்சனம்

இயக்கம்: சதீஷ் கீதா குமார்

நடிகர்கள்: வி.கார்த்திகேயன், சுபிக்ஷா.கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர்.அலிகான், வினோதினி பாண்டியராஜன், வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி டேஞ்சர் மணி கே. எஸ். ஜி வெங்கடேஷ்

ஒளிபதிவு: சதீஷ் கீதா குமார், ஜேசன் வில்லியம்ஸ்

கதைப்படி,

தற்காலிகமாக போலீஸ் பணி நீக்கத்தில் இருக்கிறார் நம்ம ஹீரோ கார்த்திகேயன். அவரது கண்களில் சிறிய குறைபாடு இருக்கிறது.

இந்த சமயத்தில், ரோட்டில் அடிபட்டு கிடக்கும் பெண் ஒருவரை காப்பாற்ற முயல்கிறார். அப்போது பிரபல அரசியல்வாதி ஒருவர் கொல்லப்படுகிறார்.

அதன் பிறகு நடப்பதே படத்தின் மீதிக் கதை…

ஹீரோவான கார்த்திகேயனுக்கு இது முதல் படம் என்பதால், சற்று சிரமப்பட்டிருக்கிறார் என்றாலும், தன்னால் முடிந்த முயற்சிகளை கொடுத்து அசத்தியிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் கைதட்டல் கொடுக்கும் அளவிற்கு தனது நடிப்பை அளவாக கொடுத்திருக்கிறார் கார்த்திகேயன்.

பெரிய் பெரிய நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும், அவர்களை இன்னும் சற்று அதிகமாகவே பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றியது.

கதை நல்லபடியாக இருந்தாலும், ஆங்காங்கே இருக்கும் லாஜிக் மீறல்கள், காட்சிகளின் ஜம்ப், என சில குறைபாடுகளை நன்றாகவே கலைந்திருக்கலாம்.

பின்னணி இசை கேட்கும்படியாக இருக்கிறது. ஒளிப்பதிவு பலம்.

ஆக்‌ஷன் காட்சிகள் வேகமெடுத்திருக்கலாம்.

சூரகன் – வேகம் பத்தல…

Related post