6 பிலிம்ஃபேர் விருதுகளை தட்டிச் சென்ற சூர்யாவின் சூரரைப் போற்று!!

 6 பிலிம்ஃபேர் விருதுகளை தட்டிச் சென்ற சூர்யாவின் சூரரைப் போற்று!!

சுதா கங்கோரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்தியது.

இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகர் விருதும், இதில் சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசை ஆல்பத்திற்காக ஜிவி பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சூரரைப் போற்று படத்தில் இடம்பெறும் ஆகாசம் பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மேலும் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் பிலிம்ஃபேரில் 2 விருதுகளை வென்று அசத்தியது. இப்படத்தில் பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். டி.ஜே.ஞானவேல் இயக்கிய இப்படத்தில் மணிகண்டன், லிஜோ மோல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அத்துடன் பா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற சார்பட்டா பரம்பரை திரைப்படமும் பிலிம்ஃபேரில் மூன்று விருதுகளை வென்று அசத்தியிருக்குது. ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

அதேபோல் இப்படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், இப்படத்தில் இடம்பெறும் நீயே ஒலி என்கிற பாடல் வரிகளை எழுதிய தெருக்குரல் அறிவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதும் வழங்கப்பட்டது.

அதே சமயம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா திரைப்படம் 7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்றது. தெலுங்கில் சிறந்த படம், சிறந்த இயக்குனராக சுகுமாரும், சிறந்த நடிகராக அல்லு அர்ஜுனும், சிறந்த இசைக்காக தேவி ஸ்ரீ பிரசாத்தும், ஸ்ரீவள்ளி பாடலை பாடிய சித் ஸ்ரீராமுக்கு சிறந்த பாடகர் விருது, ஊ சொல்றியா பாடலை பாடிய இந்திராவதிக்கு சிறந்த பாடகி விருதும், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றது புஷ்பா திரைப்படம்.

 

Related post