ஸ்டார் விமர்சனம் 3.25/5

 ஸ்டார் விமர்சனம் 3.25/5

இயக்கம்: இளன்

நடிகர்கள்: கவின், லால், அதிதி போகன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், பாண்டியன்,

ஒளிப்பதிவு: எழில் அரசு

இசை: யுவன் ஷங்கர் ராஜா

தயாரிப்பு: பிரசாத், ஸ்ரீநிதி சாகர்

தயாரிப்பு நிறுவனம்: rise east entertainment & sri venkateswara cine chitra

கதைப்படி,

கணவன் மனைவியாக வரும் லால் மற்றும் கீதா கைலாசத்திற்கு மகனாக கவின் வருகிறார். திருமணத்திற்கு போட்டோ எடுப்பவராக வருபவர் தான் லால். தன்னுடைய மகன் மிகப்பெரும் ஹீரோவாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை வளர்க்கிறார்.

ஆனால், தாய் கீதா கைலாசமோ நன்றாக படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.

கவினுக்கு நடிப்பில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார். அதற்காக நடிப்பு வாய்ப்பு தேடி அலைகிறார். அம்மாவின் வேண்டுகோளை ஏற்று பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறார் கவின்.

கல்லூரி வாழ்க்கையில் காதல் மலர, தொடர்ந்து அதன் பின்னால் ஓடுகிறார். இருந்தாலும், நடிப்பு தான் உலகம் என்று அறிந்து மும்பை சென்று அங்கும் நடிப்பு பயிற்சி பெற செல்கிறார்.

அங்கும் தனது திறமையை நிரூபிக்க போராடுகிறார். தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு ஒன்று கதவைத் தட்டும் தருணத்தில் கவினுக்கு விபத்து ஏற்படுகிறது.

அதன்பிறகு அவரது வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் கவின், வழக்கம் போல் கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்து நடித்திருக்கிறார். ஒரு சில இடத்தில் செம ஆக்டிங் என்று சொல்ல வைத்தாலும், ஒரு சில இடத்தில் ஒழுங்கா நடிப்பா என்றும் சொல்ல வைத்திருக்கிறார் கவின். சினிமாவில் இன்னமும் கத்துக்குட்டி தான் என்று சொல்லும் அளவிற்கு தான் கவினின் நடிப்பு இருக்கிறது.

நாயகிகளாக அதிதி போகன்கர், ப்ரீத்தி முகுந்தன் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பு கொஞ்சம் மெச்சும்படியாக இருந்தது.

யுவனின் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக இருந்தாலும், பின்னணி இசை இவ்வளவெல்லாம் வேண்டாமே என்று கூறும் அளவிற்கு கொடுத்திருக்கிறார்.

எழில் அரசுவின் ஒளிப்பதிவு படத்தில் பெரிய ஆறுதல். முதல் பாதி கதைக்குள் செல்லும் படமானது, இரண்டாம் பாதியில் நன்றாகவே தடுமாறியிருக்கிறது. மூலக்கதையை தாண்டி கதை பயணப்படுவதால் பெரிதான ஈர்ப்பை எட்ட முடியவில்லை.

ஸ்டார் – இன்னும் ஜொலித்திருக்கலாம்…

Related post