போர்வீரனாக சிம்பு; எஸ் டி ஆர் 48 அப்டேட்!

 போர்வீரனாக சிம்பு; எஸ் டி ஆர் 48 அப்டேட்!

பத்து தல படத்திற்கு பிறகு தனது 48வது படத்திற்காக தயாராகி வருகிறார் சிம்பு. இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கிறார்.

ரஜினிக்காக தயாரான கதையில் தான் தற்போது சிம்பு நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள். இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுன் 1ஆம் தேதி துவங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் ப்ளாஷ்பேக் காட்சிகளில் சிம்பு போர்வீரனாக நடிக்கவிருப்பதாகவும், அதற்காகவே சிம்பு நீளமான கூந்தலை வளர்த்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் படத்தின் பூஜை சென்னையில் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..

 

Related post