நீங்கள் இல்லாமல் நான் இல்லை – மாஸாக பேசி அசத்திய சிம்பு!

 நீங்கள் இல்லாமல் நான் இல்லை – மாஸாக பேசி அசத்திய சிம்பு!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவில் திரளாக கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிம்பு,

” இயக்குனர் கௌதம் முதலில் ஒரு காதல் கதையை தான் சொன்னார். நான் தான் மக்கள் விரும்பும் வகையில் வேறு ஒரு கதை பண்ண வேண்டும் என்று சொன்னேன்.

இந்த படம் மாஸ், இந்த படம் கிளாஸ் என்று சொல்ல மாட்டேன்.

இந்த படத்தில் மாஸ் உள்ளது. ஆனால் இது ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தான். நீங்கள் தான் படத்தை பார்த்து சொல்ல வேண்டும்.

சிம்புக்கு நிறைய attitude என்று சொல்வார்கள் ஆனால் எனக்கு attitude கிடையாது gratitude தான். என்னுடைய gratitude தான் attitude.

ரசிகர்கள் என்னுடைய உயிர்…

ரசிகர்கள் நீங்கள் பெருமைப்படும் அளவுக்கு நான் இனிமேல் படம் பண்ணுவேன்.

தாய், தந்தையை கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் இல்லாமல் நான் இல்லை.

பெற்றோர்கள் பசங்கள கல்யாணம் கல்யாணம் என்று பிரஸர் செய்ய வேண்டாம்.

மேலே உள்ளவன் அவர்களுக்காக ஒருவரை அனுப்புவார். பசங்க அவங்க வாழ்க்கையை வாழட்டும்.” என்று கூறினார்.

 

Related post