பாதியில் நிறுத்தப்பட்ட வாரிசு படப்பிடிப்பு… சென்னைக்கு திரும்பிய விஜய்!

 பாதியில் நிறுத்தப்பட்ட வாரிசு படப்பிடிப்பு… சென்னைக்கு திரும்பிய விஜய்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் படம் ‛வாரிசு’.

இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் என பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் வம்சிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஒரு வாரத்துக்கு வாரிசு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக ஐதராபாத்தில் தங்கியிருந்த தளபதி விஜய் தற்போது சென்னை திரும்பிவிட்டாராம்.

வம்சியின் உடல்நிலையை சரியான பிறகு மீண்டும் படப்பிடிப்பினை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

 

Related post