விஜய் மகனை இயக்கும் சுதா கொங்கரா

 விஜய் மகனை இயக்கும் சுதா கொங்கரா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் மகனான சஞ்சய் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், சில தினங்களுக்கு முன் சஞ்சய், ஒரு குறும்படத்தை இயக்குவது போன்ற புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது.

இச்சூழ்நிலையில், சூரரைப் போற்று படத்தினை இயக்கிய சுதா கொங்கரா அடுத்ததாக சஞ்சய்யை வைத்து ஒரு படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேச விஜய்யை தொடர்பு கொண்டிருக்கிறார் சுதா. அதற்கு விஜய், சஞ்சய் இயக்கத்தில் தான் மும்முரமாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். சஞ்சய்க்கு நடிப்பதில் விருப்பம் இருந்தால் நடிக்கட்டும். அவரது விருப்பம் தான் என்று கூறியிருக்கிறாராம்.

விரைவில் சஞ்சய்யிடம் பேசவிருக்கிறாராம் சுதா. சஞ்சய் ஓகே சொல்லும்பட்சத்தில் சுதா படத்தில் விரைவில் ஹீரோவாக களமிறக்கப்படவிருக்கிறார் விஜய்யின் மகன் சஞ்சய்.

 

Related post