பிரம்மாண்ட படத்தை கையில் எடுக்கும் சுந்தர் சி!

 பிரம்மாண்ட படத்தை கையில் எடுக்கும் சுந்தர் சி!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் காபி வித் காதல். இப்படத்தினைத் தொடர்ந்து தனது கனவு படத்தை கையில் எடுத்துள்ளார் சுந்தர் சி.

ஆம், 2018 ஆம் வருஷம் ஆர்யா மற்றும் ஜெயம் ரவியை வைத்து பிரம்மாண்ட வரலாற்று நாவலான சங்கமித்ரா படத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்திருந்தார். மேலும் இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தப் படம் அப்போதே தடைபட்டு நின்று போய்விட்டது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படம் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் லைக்கா நிறுவனத்துடன் உதயநிதி கைகோர்த்து இப்படத்தை தயாரிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

தமிழ் சினிமாவின் இரு பெரிய நிறுவனங்களும் இப்படத்தை தயாரிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டெக்னிக்கல் வேலைகள் குறித்த ஆலோசனைகள் ஒரு வருடத்திற்கு மேலாகவே நடைபெற்று வருகிறதாம். இதனால் படப்பிடிப்பு தொடங்கிய உடனே படத்தை எளிதாக முடித்து விடலாம் என சுந்தர் சி கூறியிருக்கிறாராம். மேலும் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி தான் இப்போதும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது

 

Related post