சுந்தர் சி நடிக்கும் பட்டாம் பூச்சி; வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!

 சுந்தர் சி நடிக்கும் பட்டாம் பூச்சி; வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!

சுந்தர் சி மற்றும் ஜெய் நடித்திருக்கும் படம் தான் “பட்டாம் பூச்சி”. இத்திரைப்படத்தை தில்லு முல்லு படத்தை இயக்கிய பத்ரி இயக்கியிருக்கிறார். குஷ்பூ தனது ஆவ்னி டெலி மீடியா சார்பில் இணைந்து தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் சுந்தர் சி நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும், நடிகர் ஜெய் முதல்முறையாக வில்லனாகவும் நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியிருக்கிறது.

சமீபத்தில் இப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி இப்படம் வெளியிடப்படவில்லை. தற்போது, ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post