இன்று சென்னை வருகிறார் சன்னி லியோன்.. ஏன் தெரியுமா.?

 இன்று சென்னை வருகிறார் சன்னி லியோன்.. ஏன் தெரியுமா.?

பிரபல நடிகையான சன்னி லியோனை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. கடந்த சில வருடங்களாக அவர் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் ஜெய் நடித்த “வடகறி” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சன்னிலியோன் கதாநாயகியாக நடித்திருக்கும் ”ஓ மை கோஸ்ட்” எனும் தமிழ் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதில் சன்னிலியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். விஏயு தயாரித்திருக்கும் இப்படத்தினை ஆர்.யுவன் இயக்கியுள்ளார்.

இப்படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் டிரேட் சென்டரில் இன்று மாலை 5;30 மணிக்கு நடக்க இருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சன்னி லியோன் வருகை தர இருக்கிறார்.

இதற்காக ரசிகர்களுக்கு ஓபன் எண்ட்ரீ கொடுக்கப்பட்டிருக்கிறது. சன்னி லியோனை நேரில் காண ரசிகர்கள் வெள்ளமென வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post