100 கோடியை நெருங்கும் டிஜிட்டல் ரைட்ஸ்… கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்!!

 100 கோடியை நெருங்கும் டிஜிட்டல் ரைட்ஸ்… கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்!!

சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் அவரின் 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்க்கான வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்க்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகவும் வியாபாரம் சுமார் 100 கோடியை நெருங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் ஷூட்டிங் கூட முடியாத நிலையில் இப்படத்தின் வியாபாரம் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்திருப்பது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது…

 

Related post