கோவாவில் துவங்கப்பட்ட “சூர்யா 42”…. மாஸ் காட்டும் சூர்யா!

 கோவாவில் துவங்கப்பட்ட “சூர்யா 42”…. மாஸ் காட்டும் சூர்யா!

சூர்யா நடிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தான் “சூர்யா 42”. இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தி நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில், சூர்யா 5 கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி இருக்கிறது. அங்கு, சூர்யா, திஷா பதானி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

 

Spread the love

Related post