சூர்யாவை இயக்கும் பிரபல மலையாள பட இயக்குனர்; லோகேஷ் கனகராஜ் படம் எப்போது?

 சூர்யாவை இயக்கும் பிரபல மலையாள பட இயக்குனர்; லோகேஷ் கனகராஜ் படம் எப்போது?

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் ஒருவரான சூர்யா, அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வரிசையில், “சிறுத்தை” சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வரும் அவர், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், ஞானவேல் ராஜா இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து 4 படங்களை தன் வசம் வைத்துள்ளார் சூர்யா.

இப்படியிருக்க பிரபல மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிஷேரி கூறிய கதையை சூர்யா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அங்கமாலி டைரிஸ்’, ‘ஜல்லிக்கட்டு’ போன்ற படங்களை இயக்கி பிரபலமான லொஜோ ஜோஸ் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மற்றும் லொஜோ ஜோஸ் கூட்டணியில்

உருவாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் சூர்யா நடித்து வந்தாலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து இயக்கவுள்ள “இரும்பு கை மாயாவி” மற்றும் “ரோலெக்ஸ்” கதாபாத்திரத்தின் ஒரு பாகமான “ரோலெக்ஸ் – ப்ரீகுவல்” படங்களை தான் ரசிகர்கள் அதிகம் எதிர் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post