சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட இருக்கிறது.
இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் இணையவிருக்கிறார் சூர்யா.
வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அன்றைய தினத்தில் சூர்யா- சிவா இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.