மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் சூர்யா படம்… அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!!

 மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் சூர்யா படம்… அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!!

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்துக் கொண்டிருப்பவர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா..

சில தினங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறும் போது, “சூர்யாவுடன் விரைவில் ஒரு படத்தில் இணையவிருக்கிறேன். கார்த்தியுடன் ஒரு படத்திலும் இணைகிறேன். அந்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரும்.

சிறுத்தை சிவா & சூர்யா இணையும் படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

இந்த நிறுவனம் தான் பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

இந்நிலையில், சிவா & சூர்யா இணையும் படத்தை மிகவும் அதிகமான பொருட்செலவில் தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

Related post