தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சூர்யா.!

 தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சூர்யா.!

ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம் பெற்ற நடிகர் சூர்யாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்!

வானமே எல்லை!” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா, ” தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் ” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

 

Related post