விக்ரம் படத்தில் சூர்யா; செம அப்டேட்!

 விக்ரம் படத்தில் சூர்யா; செம அப்டேட்!
Digiqole ad

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “விக்ரம்”. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வரும் ஜுன் 3ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக் பாஸ் ஷிவாணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் ந்டித்துள்ளனர்.

வரும் 15 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இப்படத்தில் நடிகர் சூர்யா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் வந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைஉறுதி செய்யும் விதமாக சூர்யாவும் கமல்ஹாசனும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த வீடியோவும் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

கேமியோ ரோல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.

Digiqole ad
Spread the love

Related post