விக்ரம் படக்குழுவினரோடு சூர்யா… வைரலான புகைப்படம்!

 விக்ரம் படக்குழுவினரோடு சூர்யா… வைரலான புகைப்படம்!

மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “விக்ரம்”. கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹத் பாசில் என நடிப்பின் ஜாம்பவான்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

வரும் ஜுன் மாதம் 3-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ஒன்று செய்திருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறினார்.

விக்ரம் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவோடு இயக்குனர் மற்றும் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Related post