ரோலக்ஸ் : டில்லி ஒரே மேடையில்; மதுரையை அலற விட்ட ரசிகர்கள்!

 ரோலக்ஸ் : டில்லி ஒரே மேடையில்; மதுரையை அலற விட்ட ரசிகர்கள்!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, சிங்கம் புலி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், ஆர் கே சுரேஷ் என நட்சத்திரங்கள் பட்டாளங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம் தான் “விருமன்”.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. ஏற்கனவே வெளியான காஞ்ச பூ கண்ணால பாடல் பட்டிதொட்டியெங்கும் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று ட்ரெய்லரும் வெளியானது. விழாவில் விருமன் பட தயாரிப்பாளரான சூர்யா கலந்து கொண்டார். விழாவின் இறுதியில் சூர்யாவும் கார்த்தியும் ஒன்றாக மேடை ஏறி பேசினர்.

விக்ரம் படத்தில் தனது ரோலக்ஸ் கதாபாத்திரத்தை கொண்டாடியதற்காக ரசிகர்களிடம் நன்றி தெரிவித்தார் சூர்யா. மேலும், கைதி படத்தில் கார்த்தி டில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரும் ஹிட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருவரும் ஒரே மேடையில் பேசி அசத்தியது அங்கிருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்ட தருணமாக அமைந்தது.

 

Related post