கடுமையான உடற்பயிற்சியில் சூர்யா.. வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது கங்குவா. இப்படம், சுமார் பத்து மொழிகளில் உருவாகி வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்த சூர்யா, மீண்டும் உடலை பிட்னஸ் மோட்க்கு கொண்டு வந்திருக்கிறார். இதற்காக அதிகப்படியான உடற்பயிற்சியை செய்து வருகிறார் சூர்யா.
இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.