புத்தகமாக வெளிவரும் சூர்யாவின் “ஜெய்பீம்”
சூர்யா நடிக்க ஞானவேல் இயக்கத்தில் ஓடிடி’யில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் ஜெய்பீம்.
இத்திரைப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் அதைச் சிறப்பிக்கும் விதமாக ‘ஜெய்பீம்’ படத்தின் திரைக்கதையைப் புத்தகமாகக் கொண்டுவர இயக்குனர் ஞானவேல் திட்டமிட்டுள்ளார். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தில் படத்தின் ஸ்கிரிப்ட் மட்டுமல்லாமல், படம் உருவான விதம் குறித்து அதில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதையொட்டி சூர்யா தலைமையில் விழா ஒன்றை நடத்தவும் திட்டமிட்டு தீட்டி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.