சுழல் தி வோர்டெக்ஸ்’ ஸிற்காக சாம் சி. எஸ். இசையில் உருவான ‘துவா துவா’ பாடலின் வீடியோ வெளியீடு
அமேசான் பிரைம் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ ஸிற்காக சாம் சி. எஸ். இசையில் உருவான ‘துவா துவா’ பாடலின் வீடியோ வெளியீடு
அமேசான் பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ ஸிற்காக சாம் சி எஸ் இசையமைத்த ‘துவா துவா..’ எனத் தொடங்கும் பாடலில், பாடகர்கள் ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ‘ராப்பர்’ அறிவு ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் எழுதி உருவாக்கப்பட்ட தொடர் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, ஆர். பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் உருவான ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் வலைதள தொடராகும். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட இந்திய மொழிகளுடன், வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், இட்டாலியன், ஜப்பானியம், போலந்து, போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த தொடர் மேலும் சில வெளிநாட்டு மொழிகளில் வசன வரிகளுடனும் திரையிடப்படுகிறது.
மும்பை ஜுன் 14 – 2022: ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் முன்னோட்டம் வெளியாகி, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பார்வையாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ தமிழில் நேரடியாக உருவாக்கிய நீண்ட வடிவிலான திரைக்கதை மற்றும் அசல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் புலனாய்வு பாணியிலான நாடகத்தை வெளியிடுவதற்கு முன்னதாக, மேலும் பார்வையாளர்களை கவரவும் தயாராக இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக இந்த தொடருக்காக இசையமைக்கப்பட்ட ‘ துவா துவா..’ எனும் பாடலுடன் அதன் வீடியோவையும் வெளியிடுகிறது.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்த இந்த பாடலை, பிரபல பின்னணி பாடகர்களான ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் பிரபலமான ராப் பாடகர் அறிவு ஆகியோரின் குரலில் தயாராகியிருக்கிறது.
இந்தப் பாடலில், இந்தத் தொடரில் உள்ள கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் உள கொந்தளிப்பை வெளிப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன. மேலும் இந்தத் தொடரின் மையக்கருவை வலுப்படுத்தும் வகையிலும், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலும் இந்த பாடல் அமைந்திருக்கிறது. இந்த தொடரின் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்தப்படும் செய்தியை ,மேலும் இசை மூலமாக மேம்படுத்தும் வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. இந்தியாவிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள அமேசான் பிரைம் உறுப்பினர்கள் ஜூன் 17ஆம் தேதியன்று ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரை கண்டு ரசிக்கலாம்.
இந்தப் பாடலை பற்றி இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், ” சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை பார்த்தபிறகு இதில் இடம்பெறும் பாடல் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என எனக்குத் தெரியும். தொடர் முழுவதும் ஒவ்வொரு கதாபாத்திரமும் எதிர்கொள்ளும் சம்பவங்கள் மூலம் அனுபவிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பாடல் அமைய வேண்டும் என நினைத்தேன். மேலும் இந்த தொடரின் ஆன்மாவை ‘துவா துவா’ என்ற பாடல் மூலம் கைப்பற்ற முடிந்தது.” என்றார்.
பாடகி ஜோனிடா காந்தி பேசுகையில், ” சுழல் தி வோர்டெக்ஸ் தொடரில் பங்களித்ததால் உற்சாகமாக இருக்கிறேன். இது புலனாய்வு சார்ந்த கிரைம் திரில்லர் தொடர் மட்டுமல்ல, இசை மற்றும் ஒளிப்பதிவும் ரசிக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும் தொடர். ‘துவா துவா’ பாடல் சில சுவராசியமான திருப்பங்களையும் கொண்டிருக்கிறது. சாம் சி எஸ், அறிவு, ஆண்ட்ரியா உள்ளிட்ட திறமையான குழுவினருடன் இணைந்து மியூசிக் வீடியோவில் பணி புரிந்ததும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. வீடியோவில் நாங்கள் பணியாற்றியதை அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
ஆண்ட்ரியா பேசுகையில், ” சாம் சி எஸ் ஜோனிடா, அறிவு ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவேன் என கனவிலும் நினைத்ததில்லை. இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்வான அனுபவமாக இருந்தது. இவர்கள் அனைவரும் ஒரு முகமான மனதுடன் கவனம் செலுத்தி பாடலை உருவாக்கியிருப்பது ஊக்கமளிக்கிறது. ‘துவா துவா..’ பாடலில் பணியாற்றியதை நான் மிகவும் விரும்பினேன். ஏனெனில் அந்த பாடல் வெளிப்படுத்தும் விசயம் சக்தி வாய்ந்தது. இந்த தொடரின் மையப் புள்ளியான கதைக்கருவை இந்தப் பாடல் மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.” என்றார்.
ராப் பாடகர் அறிவு பேசுகையில், ” சுழல் தொடரைப் போலவே துவா துவா என்ற பாடலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதுதான் அழகு. பாடல் வரிகள் மற்றும் இசையின் நம்பகத்தன்மையை பாடலின் தனித்துவத்தை எடுத்துரைக்கிறது. ஜோனிடா மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவும் சாம் சி எஸ் அவர்களின் இசை அமைப்பிற்கு இணைந்து பணியாற்றி இருக்கிறோம் என நான் நம்புகிறேன். ஆற்றலையும், சுழலையும் சம அளவில் வெளிப்படுத்தும் பாடல் மற்றும் அற்புதமான வீடியோவை பார்வையாளர்கள் விரும்புவார்கள் என எதிர்பார்க்கிறேன்.” என்றார்.
‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டிலிருந்து ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் பிரைம் வீடியோ பட்டியலில் சேரும். இதில் இந்திய தயாரிப்பான அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் மும்பை, மும்பை டைரிஸ், தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா, ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பண்டிஷ் பேண்டிட்ஸ், பாடல் லோக், தாண்டவ், மிர்சாபூர் சீசன் 1 & 2, தி ஃபார்காட்டன் ஆர்மி – ஆசாதிகேலியே, சன்ஸ் ஆஃப் த ஸாய்ல், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மேட் இன் ஹெவன், மற்றும் இன்சைட் எட்ஜ், கூலி நம்பர் 1, குலாபோ சிதாபோ, துர்கமதி, சாலாங், சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், பிரெஞ்ச் பிரியாணி, சட்டம், சூஃபியும் சுஜாதாயும், பெங்குயின், பெங்குயின், நிசப்தம், மாறா, வி, சியூ சூன், சூரரைப் போற்று, பீம சேனால மகாராஜா, த்ரிஷ்யம் 2, ஹலால் காதல் கதை, மிடில் கிளாஸ் மெலடிகள், புத்தம்புதுகாளை, அன்பாஸ்டு இவை நீங்கலாக மற்றும் விருது பெற்ற மற்றும் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட போரட்ம் ஸப்ஸ்க்யூயண்ட் பிலிம், போரட்ம் போன்ற உலகளாவிய அமேசான் ஒரிஜினல்ஸ் சப்சிக்வல்கள் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ் மைசெல். இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் தலைப்புகள் உள்ளன.
பிரைம் உறுப்பினர்கள், ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்கள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ பயன்பாட்டில் எங்கும் எந்த நேரத்திலும் தொடரைப் பார்க்க முடியும். பிரைம் வீடியோ பயன்பாட்டில், பிரைம் உறுப்பினர்கள் எபிசோடுகளைப் பதிவிறக்கலாம். அவர்களின் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் எங்கும் ஆஃப் லைனில் பார்க்கலாம். பிரைம் வீடியோ இந்தியாவில் கூடுதல் கட்டணமின்றி பிரைம் மெம்பர்ஷிப்புடன் ஆண்டுக்கு ரூ1499 அல்லது மாதந்தோறும் ரூ179க்கு கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime இல் மேலும் பல தகவல்களை அறியலாம். 30 நாள் இலவச சோதனைக்கும் பிரத்யேகமான குழுவில் சேரலாம்.