Tags : aniruth

News Tamil News

லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் அதர்வா!

அதர்வா அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அதர்வாவிற்கு ஜோடியாக போனிகபூரின் இரண்டாவது மகளான குஷி கபூர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் எனவும் தெரிகிறது. விக்னேஷ் சிவனின் அசோசியேட்டான ஆகாஷ் இப்படத்தை இயக்கவிருக்கிறாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.Read More

News Tamil News

ஜெயிலர் வெற்றி: அனிருத்திற்கும் கார் பரிசாக வழங்கிய

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றிப் படமாக திரையரங்குகளில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். வரலாறு காணாத வசூல் மழையை கொடுத்து வரும் ஜெயிலர் படத்தால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பங்கு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்கும் கார் மற்றும் பணம் வழங்கினார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். அதேபோல், நேற்று படத்தின் இசையமைப்பாளரான […]Read More

News Tamil News

அதிரடி சண்டைக் காட்சிகளில் மிரள வைத்த “ஜவான்”

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஜவான்”. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதிரடியான சண்டைக் காட்சிகளுடன் வெளியான இதன் ட்ரெய்லர், சினிமா ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையும் விஷ்ணுவின் ஒளிப்பதிவும் பக்கபலமாக இருந்து காட்சிகளை கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள். யூ டியூப் தளத்தில் இதுவரை, தமிழில் 5.4 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கில் 3.1 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 41 மில்லியன் பார்வைகளையும் […]Read More

News Tamil News

மாஸ் காட்டிய ரஜினி; குத்தாட்டம் போட்ட தமன்னா…

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ஜெயிலர்”. வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. காவாலா… எனத் தொடங்கும் அந்த பாடல் யூடியூப் பக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜானி மாஸ்டரின் நடன அமைப்பு, அனிருத்தின் இசை, தமன்னாவின் நடனம், ரஜினிகாந்தின் ஸ்டைல் என இந்த பாடலில் ரசிக்கும்படியான அமைப்புகள் […]Read More

News Tamil News

நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் நடிக்கும் கவின்!

கவின் நடிப்பில் லிஃப்ட் மற்றும் டாடா இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படத்தின் பணிகளில் தற்போது இறங்கியிருக்கிறார் கவின். கவினின் அடுத்த படத்தை பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் இயக்க உள்ளார். அவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் இப்படத்தை தயாரிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு […]Read More

News Tamil News

விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை தயாரிக்கும் கமல்!?

லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால், இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே போனது. விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் […]Read More

News Tamil News

தலைவர் 170 வது படத்திற்கு அனிருத் வாங்கும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. ரஜினிகாந்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்தில் இசையமைப்பதற்காக அனிருத் சுமார் 4 கோடி ரூபாய் சம்பளமாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. தமிழ் சினிமாவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத் உருவெடுத்திருக்கிறார்.  Read More

News Tamil News

ஏகே 62”; மீண்டும் அஜித்தோடு இணைந்த அனிருத்!

அஜித் நடிக்க லைகா தயாரிப்பில் உருவாக இருக்கிறது “ஏகே 62”. அஜித்குமாரின் 62வது படமான இதை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து விலகியதாகவும் இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இபப்டத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அஜித்தின் பேவரைட் ஒளிப்பதிவாளரான நிரவ் ஷா இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றவிருக்கிறார். வேதாளம், விவேகம் படங்களைத் […]Read More

News Tamil News

ரஜினி கெஸ்ட் ரோல், அனிருத் இசை, லைகா

3, வை ராஜா வை படங்களைத் தொடர்ந்து, புதியப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகனாக அதர்வா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் தனது தந்தையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க ப்ளான் செய்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. அடுத்த மாதம் இப்படத்திற்கான பூஜை நடைபெறவிருக்கிறது. இன்னும் ஓரிரு தினத்தில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது…  Read More

News Tamil News

திருச்சிற்றம்பலம்; ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் இத்தனை

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வியாழன் அன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “திருச்சிற்றம்பலம்”. ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்போடு வெளியான இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குடும்ப ரசிகர்களை வெகுவாக இப்படம் கவர்ந்திருக்கிறது. இதனால் படத்தின் வசூல் எகிற ஆரம்பித்திருக்கிறது. முதல்நாளிலே, தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 5 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. மேலும் விடுமுறை தினங்களில் இதன் வசூல் அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.Read More