Tags : gv prakashkumar

News Tamil News

ஏப்ரல் 4ல் ரிலீஸாகும் கள்வன்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘கள்வன்’. இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார் ரேவா. […]Read More

News Tamil News

மீண்டும் துல்கர் சல்மானோடு ரக்‌ஷன் !

துல்கர் சல்மான் மற்றும் ரக்‌ஷன் இருவரும் இணைந்து நடித்து வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில்,இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனாஅன கார்த்திகேயன் வேலப்பன் இயக்கத்தில் துல்கர் சல்மான் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திலும் ரக்‌ஷன் நடிக்கவிருக்கிறாராம். மேலும் இந்த படத்தில் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவிருக்கிறாராம். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் […]Read More

News Tamil News

ஆர்யா நடிக்கும் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்க உருவாகி வரும் படம் தான் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில், கருப்பு நிற சட்டையும், கருப்பு நிற வேட்டியும் அணிந்து நெற்றியில் திலகமிட்டு சேர் ஒன்றில் அமர்ந்திருக்கிறார் ஆர்யா. அவருக்குப் பின்னால் பாட்ஷா ரஜினியின் உருவம் வரையப்பட்டிருந்தது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த போஸ்டர். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. […]Read More

News Tamil News

விஷாலின் “மார்க் ஆண்டனி” பட லேட்டஸ்ட் அப்டேட்!

விஷால் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”. இப்படத்தினை பான் இந்தியா திரைப்படமாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கவிருக்கிறார். 1990ம் காலகட்டத்தில் இருந்த சென்னை போன்ற செட் ஒன்று பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது படக்குழு. வரும் 18 ஆம் தேதி விஷால் – எஸ் ஜே சூர்யா சண்டைக் காட்சி ஒன்று படமாக்கவுள்ளார்களாம். இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜி வி பிரகாஷ்குமார்.  Read More